மேடான் டாமன்சாராவில் உள்ள பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவின் அலுவலகத்திற்கு வெளியே, இன்று மாலை 6.15 மணியளவில் புக்கிட் அம்மான் வர்த்தகக் குற்ற விசாரணைத் துறை அதிகாரிகள், கைது செய்துள்ளனர்.
கைதிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், நாளை காலை ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் தன் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் போலிக் கல்வித் தகுதிகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அம்மான் வர்த்தகக் குற்ற விசாரணைத் துறை இயக்குநர் ஆணையர் டத்தோ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறியுள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.