Home Featured நாடு தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு!

தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு!

853
0
SHARE
Ad

devamany-2

புத்ரா ஜெயா – தற்போது பிரதமர் துறை துணையமைச்சராகவும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்பை வகிப்பவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் அமைச்சுக்கான (Ministry of Energy, Green Technology and Water) இரண்டாவது துணையமைச்சராகவும் இன்றும் முதல் தேவமணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ பங்லிலிமா டாக்டர் மேக்சிமஸ் ஓங்கிலியின் கீழ் இந்த அமைச்சின் துணையமைச்சுப் பொறுப்புகளையும் தேவமணி இனி வகித்து வருவார்.

#TamilSchoolmychoice

தனக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய பொறுப்புகளை தான் வரவேற்பதாகவும், தனது உழைப்பையும், சேவைகளையும், திறனையும் வழங்குவதற்கு தனக்குக் கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பாக இதனைக் கருதுவதாகவும், ஒரு புதிய சவாலாக இந்த புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று செயல்படப் போவதாகவும் தேவமணி தெரிவித்துள்ளார்.

தன்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தேவமணி தனது புதிய நியமனம் குறித்து மேலும் தெரிவித்துள்ளார்.