Home Featured கலையுலகம் மியன்மார் நிலநடுக்கத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான்!

மியன்மார் நிலநடுக்கத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான்!

698
0
SHARE
Ad

jibranசென்னை – தனது புதிய படமான சென்னை டூ சிங்கப்பூரின் பாடல் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகளுக்காக மியன்மார் சென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், அங்கு ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், அவரது நலம் பற்றிய முழுத் தகவலைப் பெற தற்போது ஊடகங்கள் முயற்சி செய்து வருகின்றன.

சிங்கப்பூரைச் சேர்ந்த இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கியுள்ள ‘சென்னை டூ சிங்கப்பூர்’ என்ற புதிய திரைப்படத்தின் பாடல் வெளியீட்டை, ஒரு இசைப் பயணமாக அமைக்கத் திட்டமிட்ட படக்குழு, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி சென்னையிலிருந்து பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கார் ஒன்றின் மூலம் சாலை வழிப்பயணமாகச் சென்று இறுதியாக சிங்கப்பூரில் நிறைவு செய்யத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.