Home Featured நாடு சஞ்சீவன் வீட்டில் காவல் துறை அதிரடி சோதனை!

சஞ்சீவன் வீட்டில் காவல் துறை அதிரடி சோதனை!

848
0
SHARE
Ad

SANJEEVAN-685x320

காஜாங் – மைவாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சார்பற்ற இயக்கத்தை நடத்தி வரும் டத்தோ ஆர்.சஞ்சீவனின் காஜாங் நகர் இல்லத்தில் காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான் நடத்திய அதிரடி சோதனையில், அவரது பிஎம்டபிள்யூ காரும் 4 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.10 முதல் 4.30 மணி வரை அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன என இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கைப்பற்றப்பட்ட பொருட்கள் தற்போது செராசிலுள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. பண இருட்டடிப்புக்கு எதிரான சட்டம் (அம்லா) பிரிவு 45-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் சஞ்சீவனின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

சோதனையின் போது தனது வீட்டின் முகப்பு சேதப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சஞ்சீவன்,  தன்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதிரடி சோதனை குறித்து காவல் துறை மன்னிப்பு கேட்காவிட்டால், தான் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

குற்றவாளிகளை அடையாளம் காட்டிக் கொடுக்கும் தன்னைப் போன்றவர்களை காவல் இழுத்தடித்து, மிரட்டுகின்றது எனவும் சஞ்சீவன் கூறியுள்ளார்.

சஞ்சீவன் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளை காவல் துறை உயர் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சஞ்சீவன் நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றார்.