Home Featured நாடு சோரோஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை – காலிட் அறிவிப்பு!

சோரோஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை – காலிட் அறிவிப்பு!

1143
0
SHARE
Ad

Khalid Abu Bakarசுபாங் ஜெயா – உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் செய்தி இணையதளத்திற்கு, அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய சிறப்புப் பணிக் குழு அமைக்கப்படும் என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

அந்த சிறப்புப் பணிக்குழு புக்கிட் அம்மானின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ சைனுடின் அகமட் தலைமையில் செயல்படும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

“தற்போது இணையத்தில் வெளியான அறிக்கைகள் மற்றும் புகார்களை தற்போது சிறப்புக் குழு விசாரணை செய்து வருகின்றது. அது நிறைவடைந்தவுடன், வாக்குமூலம் அளிக்க நாங்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைப்போம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவுகளைச் சாதகமாக்கிக் கொள்ள, பல்வேறு மலேசிய அமைப்புகளுக்கு சோரோஸ் என்ற தொழிலதிபர் தனது திறந்த சமூக அறக்கட்டளை மூலமாக நிதி வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெர்சே அமைப்பு மற்றும் மலேசியாகினி இணையதளம் உட்பட பல்வேறு அமைப்புகள் மீது இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.