Home Featured நாடு சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி – ஜமால் அறிவிப்பு!

சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி – ஜமால் அறிவிப்பு!

1012
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – வரும் நவம்பர் 19-ம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவப்புச் சட்டைப் பேரணிக்கு மாற்றாக,  வரும் சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு வெளியே பேரணி நடைபெறுமென சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோசின் திறந்த சமூக அறக்கட்டளை மூலமாக மலேசிய அரசியலில் வெளிநாட்டுத் தலையீடுகளை கொண்டு வந்ததாக மலேசியாகினி மீது குற்றம் சாட்டும் ஜமால், அதற்காக மலேசியாகினிக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சோரோஸ் வழங்கிய நிதியை மலேசியாகினியும் பெற்றுள்ளதாக ஜமால் குற்றம் சாட்டுகின்றார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஜமால் அளித்துள்ள புகாரில் பெர்சே அமைப்பும் சோரோசின் திறந்த சமூக அறக்கட்டளை மூலமாக நிதி பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.