Home உலகம் சரவணன், இலங்கை மட்டக்களப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்!

சரவணன், இலங்கை மட்டக்களப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்!

200
0
SHARE
Ad

மட்டக்களப்பு (இலங்கை) – அண்மையில் இலண்டன் சென்று கம்பன் விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு’ விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டின் திறப்பு விழாவில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர்  செந்தில் தொண்டமான் அவர்களுடன் இணைந்து, சரவணன் நகரின் முக்கிய சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருஉருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாட்டில் சிறப்புரையாற்றிய சரவணன் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட மலரை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

#TamilSchoolmychoice