Home One Line P2 கமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா?

கமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா?

904
0
SHARE
Ad

சென்னை: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 7) நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள்.

அவரது பிறந்தநாளையும், தமது 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையையும் கொண்டாடும் விதமாக வருகிற நவம்பர் 9-ஆம் தேதி நடக்க இருக்கும் மூன்று நாட்கள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், நடிகர் அஜித்குமாருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சாத்தியமானால், நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒரே மேடையில் இருப்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகக் காணக் கிடைக்கும் என்று பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

#TamilSchoolmychoice

கடைசியாக நடிகர் அஜித் முன்னாள் முதலைச்சர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அழைப்பை ஏற்ற அஜித், தாம் நிச்சயமாக கலந்து கொள்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.