Home One Line P1 “மசீச பிற கட்சிகளைப் போல இனவெறிக் கொண்டதல்ல!”- வீ கா சியோங்

“மசீச பிற கட்சிகளைப் போல இனவெறிக் கொண்டதல்ல!”- வீ கா சியோங்

678
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய்க்காரர்கள், இஸ்லாமிய மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை சீண்டி, மசீச ஒருபோதும் கருத்துகள் தெரிவித்ததில்லை என்று அதன் தலைவர் டாக்டர் வீ கா சியோங் நேற்றிரவு புதன்கிழமை தஞ்சோங் பியாயில் தெரிவித்தார்.

மலாய்க்காரர்களே மற்றொரு மலாய்க்காரர்களை கீழ் தள்ளக் கோரும் ஜசெக கட்சியைப் போல மசீச இல்லை என்று அவர் கூறினார்.

அம்னோ தலைவர் டாக்டர் அகம்ட சாஹிட் ஹமிடி, மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மேடையில் இருக்கையில், கா சியோங், அனைத்து மதங்களும் எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களை ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக் கொடுத்துள்ளன என்று கூறினார்.

#TamilSchoolmychoice

வரலாற்றில், மசீச மலாய்க்காரர்கள், இஸ்லாமியம் மற்றும் நாட்டின் ஆட்சியாளர்களை விமர்சித்ததில்லை.”  என்று 2,000 பேர் முன்னிலையில் அவர் பேரினார். 

உம்மாவின் ஒற்றுமை குறித்து, சில நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இந்த வளர்ச்சியை தலிபான் நிருவாகத்தின் அபாயங்களுடன் இணைத்துப் பேசியதை ஒப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் ஜசெக துணை பொதுச்செயலாளர் ங்கா கோர் மிங் அம்னோ மற்றும் பாஸ் ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்தை கா சியோங் குறிப்பிட்டுப் பேசினார்.

சீன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்பட்டாலும் மசீச மற்ற கட்சிகளிலிருந்து வேறுபடுவதாக அவர் தெரிவித்தார்.

எல்லா சீனர்களும் இனவெறி கொண்டவர்கள் அல்ல என்றும், அவர்கள் ஒரு சிலரே என்றும், அவர்கள் மசீசவை விட வேறுபட்ட சித்தாந்தத்தை கொண்டு செல்லக்கூடும் என்றும் அவர் கூறினார்.