Home One Line P2 ஹாங்காங் போராட்டங்களால் 275 மில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா

ஹாங்காங் போராட்டங்களால் 275 மில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா

832
0
SHARE
Ad

ஹாங்காங் – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்திருக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா அமெரிக்காவைத் தவிர்த்து, சில வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு டிஸ்னிலேண்ட் அமைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்று ஹாங்காங்.

கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் தொடர்ந்து நீடித்து வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து இங்குள்ள டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுமார் 275 மில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு தங்களுக்கு நடப்பாண்டில் ஏற்படும் என டிஸ்னி நிறுவனம் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

டிஸ்னிலேண்ட் மட்டுமின்றி, ஹாங்காங்கின் சுற்றுலாத் துறையும், மக்கள் போராட்டங்களால் கணிசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

ஹாங்காங் தவிர்த்து பாரிஸ், தோக்கியோ, ஷங்காய் ஆகிய நகர்களிலும் டிஸ்னி தனது உல்லாசப் பூங்காக்களை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஹாங்காங் வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 37 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.