வாஷிங்டன் – அடுத்த 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு எந்த நாடு மிகப் பாதுகாப்பானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக இருக்கும். உலகின் பாதுகாப்பான 8 நாடுகளைப் பட்டியலிட்டிருக்கின்றன சுற்றுலா ஆய்வு நிறுவனங்கள்.
அந்த 8 நாடுகள் பின்வருமாறு:
- டென்மார்க்
- பின்லாந்து
- கிரீன்லாந்து
- ஐஸ்லாந்து
- நோர்வே
- சுலோவேனியா
- லக்சம்பெர்க்
- சுவிட்சர்லாந்து
இந்த நாடுகள் அனைத்துமே வட ஐரோப்பியாவில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடுகளைத் தவிர பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, மற்ற ஐரோப்பிய நாடுகள் குறைந்த அபாயம் கொண்ட நாடுகளாகப் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.
மிகவும் அபாயம் வாய்ந்த நாடுகளாக ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் மத்திம மற்றும் அதிக அபாயம் கொண்ட நாடுகள் என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.