Home One Line P1 சரவணன் தலைமையில், தமிழக அறிஞர்களின் உரைகளோடு, ‘கண்ணதாசன் விழா’

சரவணன் தலைமையில், தமிழக அறிஞர்களின் உரைகளோடு, ‘கண்ணதாசன் விழா’

991
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ் மொழியின் வரலாற்றிலும், தமிழர்களின் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்ட மாபெரும் கவிஞன் கவியரசு கண்ணதாசனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து வரும் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் ‘கண்ணதாசன் அறவாரியம்’ இந்த ஆண்டும் அந்த விழாவை இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடங்கி செந்தூல், செட்டியார்கள் மண்டபத்தில் நடத்துகிறது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான சரவணனின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டிலிருந்து வருகை மேற்கொண்டிருக்கும் சுபாஷ் சந்திரன், பாரதி பாபு, மரபின் மைந்தன் முத்தையா வழக்கறிஞர் த.இராமலிங்கம், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்துகின்றனர்.

கவியரசு கண்ணதாசனின் இலக்கிய மேன்மை குறித்தும், கவிதை, இசைப் பாடல்களில் அவரது ஆளுமை குறித்தும் உரையாளர்கள் வழங்கவிருக்கும் இலக்கிய இன்பத்தைத் பருக ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.