Home One Line P1 பகாங் பிகேஆர்: எம்ஏசிசி கடிதத்தின் உள்ளடக்கம் தீவிரமானது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- அன்வார்

பகாங் பிகேஆர்: எம்ஏசிசி கடிதத்தின் உள்ளடக்கம் தீவிரமானது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- அன்வார்

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சாகாரியா ஹாமிட்டின் தவறான நடத்தை குறித்த எம்ஏசிசியின் கடிதத்தின் உள்ளடக்கம் தீவிரமானது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அன்வார் தனிப்பட்ட முறையில் அக்கடிதத்தைப் படிக்கக் கேட்டுக்கொண்டதாகவும், அக்குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும் அவர் கூறினார்.

கடிதத்தை ஒழுக்காற்றுக் குழுவிடமிருந்து நான் கோரினேன், ஏனென்றால் அது மிகவும் தீவிரமானதா என்பதை தீர்மானிக்க. எனவே நான் அக்கடிதத்தைப் படித்தேன், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். பின்னர் எம்ஏசிசிக்கு தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசியல் கட்சிகளுக்கு எம்ஏசிசி தவறான செயல் குறித்த கடிதங்களை அனுப்புவதாக இல்லை என்று கூறினாலும், எம்ஏசிசியின் கடிதத்தின் உள்ளடக்கங்களை தாம் மறுக்கவில்லை என்று அன்வார் கூறினார்.

கடிதத்தின் உள்ளடக்கங்கள் மறுக்கப்படவில்லை. தவறு, அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம் மற்றும் விஷயங்களுக்கு இது பல ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.”

ஒரு கட்சியாக நாம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். எனவே எம்ஏசிசி விசாரணை தவறாக இருந்தால், எம்ஏசிசி நமக்கு தெரியப்படுத்தட்டும்,”என்று அவர் கூறினார்.

இருப்பினும், அன்வாரின் கூற்றுப்படி, பதவி நீக்கம் செய்யப்பட்ட சாகாரியா மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறினார்.