Home One Line P2 பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பாலா சிங் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பாலா சிங் காலமானார்!

1507
0
SHARE
Ad

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகரான பாலா சிங் இன்று புதன்கிழமை (நவம்பர் 27 ) தனது 67-வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பாலா சிங் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 67. சில நாட்களுக்கு முன்னர், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இறந்தார். பாலா சிங்கின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் செல்வராகவன் திரைப்படமானபுதுப்பேட்டைபடத்தில் பாலா சிங் பிரபலமானவர். நடிகர் நாசரின் திரைப்படமானஅவதாரம்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் வழக்கமாக திரைப்படங்களில் வில்லனாகக் காணப்படுவார்.

#TamilSchoolmychoice

முக்கியமாக தமிழ் திரைப்படத்தில் அரசியல்வாதியின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். 2009-ஆம் ஆண்டில், வன்னத்துபூச்சியில் தாத்தாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உறவைப் பேசும் படமாக இப்படம் அமைந்தது.

நாசரின் அவதாரத்தில் (1995) தனது முதல் திரைப்பட பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு முன்பதாக, பாலா சிங் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சங்கர், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.