இத்திரைப்படத்தில் கிராமத்தில் வசிக்கும் சூர்யா ஒர் இயற்கை (ஆர்கானிக்) விவசாயி ஆவார். பிறகு, இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். தீவிரவாதிகளிடம் இருந்தும், உள்நாட்டு துரோகிடமிருந்தும் பிரதமரைப் பாதுகாக்க சூர்யா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.
அதுமட்டுமின்றி, அண்மையில் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்த ‘சாஹோ’, சித்தார்த் கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிப்பில் ‘அருவம்’, ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்த ‘ஜாக்பாட்’, அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கொலையுதிர் காலம்’, அஜித் குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.
மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.