Home One Line P2 வங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

வங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

1392
0
SHARE
Ad

டாக்கா: மேற்கத்தியர்களிடையே பிரபலமான டாக்கா உணவகம் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை நடத்திய, டாக்டர் ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வங்காளதேச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்தது.

தலைநகர் டாக்காவில், நீதிபதி மோஜிபுர் ரஹ்மான், ஏழு தாக்குதல்காரர்கள் ஐஎஸ் கவனத்தை ஈர்க்க விரும்பியதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் பொது பாதுகாப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியும், அராஜகத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஜிஹாட் அமைப்பை நிறுவவும் விரும்பினர். அந்த ஏழு பேரும் இறந்ததாக அறிவிக்கப்படும் வரை தூக்கிலிடப்படுவார்கள்என்று அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட எட்டாவது நபர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த இக்கொடுரத்தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 18 பேர் வெளிநாட்டினர்.

டாக்கா தாக்குதலுக்குப் பிறகு ஜாகிர் 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறினார். ஜூலை 2016-இல் டாக்கா தாக்குதலுக்குப் பின்னால் குறைந்தது இரண்டு பேர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிய பின்னர், அவர் இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தார்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் தாக்குதலுக்கு முன்னர் ஜாகிரை மேற்கோள் காட்டி முகநூலில் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் ஜாகிர் இந்தியாவில் தேடப்பட்டு வருகிறார்.

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு, ஜாகிருக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 2016-ஆம் ஆண்டில் பல்வேறு மதக் குழுக்களிடையே பகைமையை வளர்த்ததாகக் குற்றம் சாட்டியது.

ஜாகிர் நிறுவிய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் அலுவலகங்கள் உட்பட ஜாகிர் மற்றும் அவரது ஊழியர்களுடன் இணைக்கப்பட்ட வளாகங்கள் பின்னர் சோதனை செய்யப்பட்டு தேடப்பட்டன.

மலேசியாவில் நிரந்தர குடியுரிமையைப் பெற்று, தஞ்சம் புகுந்த ஜாகிர், நியாயமற்ற விசாரணை தம்மீது நடக்காது என்று உறுதிபடுத்தப்படும் வரை தாம் இந்தியா திரும்பப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஜாகிர் மலேசியாவில் ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் நபராக சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டார். இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மீதான ஆத்திரமூட்டும் கருத்துகளால் அவர் மீது 500-க்கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.