Home கலை உலகம் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ திரைப்படம்

அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ திரைப்படம்

1019
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘காப்பான்’ திரைப்படத்தை நவம்பர் 28-ஆம் தேதி தொடக்கம் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களிக்கலாம்.

இத்திரைப்படத்தில் கிராமத்தில் வசிக்கும் சூர்யா ஒர் இயற்கை (ஆர்கானிக்) விவசாயி ஆவார். பிறகு, இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். தீவிரவாதிகளிடம் இருந்தும், உள்நாட்டு துரோகிடமிருந்தும் பிரதமரைப் பாதுகாக்க சூர்யா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

கதாநாயகியாக வரும் சாயிஷா, சூர்யா மீது காதல் வசப்பட்டு அவரை விரட்டி விரட்டிக் காதலிக்கும் வேளையில் அவர் மீது பிரதமரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறார். இதற்கிடையில், இத்திரைப்படத்தில் மோகன்லால் இந்தியப் பிரதமராகவும் ஆர்யா அவரது மகனாகவும் வலம் வருகின்றார்கள்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அண்மையில் அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்த ‘சாஹோ’, சித்தார்த் கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிப்பில் ‘அருவம்’, ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்த ‘ஜாக்பாட்’, அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கொலையுதிர் காலம்’, அஜித் குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.

மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.