Home One Line P1 பிகேஆர் இளைஞர் அணி எந்தவொரு தலைவரையும் அதிகமாக ஆதரிக்கவில்லை!

பிகேஆர் இளைஞர் அணி எந்தவொரு தலைவரையும் அதிகமாக ஆதரிக்கவில்லை!

680
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: பிகேஆர் இளைஞர் அணி (ஏஎம்கே) பிகேஆரில் எந்தவொரு தலைவருக்கும் சார்பாக இருந்து ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது.

அதன் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசீர் கூறுகையில், சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான அழைப்புகள், அதன் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது என்று கூறினார்.

பிரதிநிதிகளுக்கான அறிவிப்பு எந்தவொரு பிரிவினருக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்த வாரம் நடக்க இருக்கும் இளைஞர் அணி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து பிரதிநிதிகளையும் நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

ஏஎம்கே தேசிய காங்கிரஸ் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவர்களால் இந்த பொதுக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படும்.