Home One Line P1 திறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற சுகாதார அமைச்சுக்கு திட்டமில்லை!

திறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற சுகாதார அமைச்சுக்கு திட்டமில்லை!

713
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திறந்த வெளியில் மக்கள் மது அருந்துவதை தடைசெய்யும் சட்டத்தை இயற்ற எந்த திட்டமும் சுகாதார அமைச்சகத்திற்கு இல்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

சில இடங்களில் பகிரங்கமாக மது அருந்துவதை தடைசெய்ய அதிகாரம் உள்ள ஊராட்சி ஆணையம் (பிபிடி) போன்ற பிற நிறுவனங்களின் அதிகாரத்தில் அமைச்சகம் தலையிட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

நாட்டில் விற்கப்படும் மதுபானங்களின் உள்ளடக்கங்கள், மற்றும் அவற்றில் உள்ள அல்கோஹல் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே அமைச்சகம் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சகம் இந்த அதிகாரத்தில் தலையிடாதுஎன்று இன்று புதன்கிழமை அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

மதுவினால் அதிகரித்து வரும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் அல்லது சில இடங்களில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மலேசிய முஸ்லீம் நுகர்வோர் சங்கம் (பிபிஐஎம்) மற்றும் பிற அமைப்புகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன.