Home One Line P1 மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன!

மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன!

5459
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

மலாக்கா: இங்குள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மலாக்காவின் முக்கிய இடமான ஜொங்கர் வாக் உட்பட 24 சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் வைக்கப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் பலகைகளில் நான்கு மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மலாக்கா ஊராட்சி மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் டத்தோ டே கோக் கியேவ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மலாய், ஆங்கிலம், சீனம், மற்றும் தமிழ் மொழிகள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது”.

இணக்கமான மக்களை பிரதிபலிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகளில் ஜாவி எழுத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மலாக்கா வரலாற்று நகர சபை கடந்த நவம்பர் 14-ஆம் தேதி 6,000 ரிங்கிட் செலவில் இந்த பெயர் பலகைகளை நிறுவியதாகத் தெரிவித்தார்.