Home One Line P1 கம்யூனிஸ்ட் குறித்த ஊகங்களை பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்!- காவல் துறை

கம்யூனிஸ்ட் குறித்த ஊகங்களை பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்!- காவல் துறை

893
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பிகேஎம்) முன்னாள் உறுப்பினர்களின் கூட்டத்துடன் தொடர்புடைய சிலர் கம்யூனிஸ்ட் உடையணிந்திருந்த புகைப்படங்கள் சமீபத்தில் சமூக பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

அது தாய்லாந்தின் ஹாட்யாயில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விழாவின் போது எடுக்கப்பட்ட படம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2-ஆம் தேதியன்று தாய்லாந்தின் ஹாட்யாயில் உள்ள லீ கார்டன் தங்கும் விடுதியில் நடந்த விழாவின் போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுஎன்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், காஜாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு குறித்து அவர்கள் இன்னும் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

இன்றுவரை, அக்கூட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 53 காவல் துறை புகார் அறிக்கைகளை காவல் துறை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்து வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணையை காவல் துறை வழங்கும் என்று அவர் கூறினார்.

நாட்டில் பதட்டமான மற்றும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் என்றபடியால், இந்த நிகழ்வு குறித்த ஊகங்களை நிறுத்துமாறு ஹுசிர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக அறிக்கைகள் அல்லது கட்டுரைகளை பதிவேற்றுவது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் கீழ் விசாரணையை ஏற்படுத்தக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது,” என்று அவர் கூறினார்.