Home One Line P1 சாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு!

சாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு!

1534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மஇகா தலைவரும், நீண்டகால பொதுப்பணித்துறை அமைச்சருமான துன் எஸ். சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதையும், அவர் தமது சொந்த விவகாரங்களை நிர்வகிக்க முடியுமா என்பதையும் நீதிமன்றம் கண்டறிய வேண்டும் என்று கோரி, தனது தந்தைக்கு எதிராக டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதியன்று இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டி எட்ஜ் பைனான்சியல் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அவரது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை தீர்மானிக்க, மனநலச் சட்டம் 2001-இன் பிரிவின் கீழ் விசாரணையை நடத்த அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் மூத்த அமைச்சரான சாமிவேலு இப்போது மனநலம் குன்றியிருக்கிறார் என்றும், அவர் தனது வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்க முடியுமா, எப்போது அவரால் எதையும் நிர்வகிக்க இயலாது என்றும் தீர்மானிக்க இந்த வழக்கு நோக்கமாக உள்ளது. இது தம் தந்தைக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கைச் சேர்ந்த,  நரம்பியல் ஆலோசகர், மனநல மருத்துவர் டாக்டர் பிரேம் குமார் சந்திரசேகரன் அல்லது பிற மருத்துவர்கள் தனது தந்தையை பரிசோதித்த மருத்துவ அணுகல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தனது தந்தையின் மனநல நிலை குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்தால் ஒரு தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், சாமிவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.