Home One Line P2 புது டில்லி: தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் மரணம்!

புது டில்லி: தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் மரணம்!

616
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் புது டில்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பிகள் நிரப்பப்பட்ட ஒரு குறுகிய தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியை கடினமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்த சந்தையில் தீ விபத்து தொடங்கியதாகவும், மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை சட்டப்பூர்வமாக இயங்குகிறதா என்று தற்போது காவல் துறையினர் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன.