முன்னாள் மஇகா தலைவர் சாமிவேலுவுடன் “சேர்ந்து வாழ்ந்தவர்” என்று கூறியதுடன், அவரது பிரதான வழக்கு தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளதால், அவருக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்த 25,000 ரிங்கிட் பராமரிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது குறித்து செய்தி வெளியிட்ட பிரி மலேசியா டுடே, மெரியம் தனக்கு வழங்கப்பட்ட பிற சலுகைகளும் நிறுத்தப்பட்டதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.
சாமிவேலுவின் மகனான வேள்பாரி, தனது வாழ்க்கைச் செலவுகளை மறுத்து, 2017 முதல் தனது தந்தையின் நிதிக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதாக என்று அவர் கூறினார்.
இடைக்கால விண்ணப்பம் இன்று வியாழக்கிழமை ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி ஹாஷிம் ஹம்சா முன் விசாரிக்கப்படும்.
ஈப்போவில் வசிக்கும் மெரியம் என்ற பெண்மணியை வழக்கறிஞர்கள் ஆர்எஸ்என் ராயர் மற்றும் ரமேஷ் சிவகுமார் பிரதிநிதிக்கின்றனர்.
தனது ஆதரவு வாக்குமூலத்தில், மெரியம் கடந்த 1981 முதல் சாமிவேலுவுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தனது கூற்றை ஆதரிக்கும் ஆவண ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவரா, தனது சொந்த விவகாரங்களை கையாள முடியவில்லையா என்பதை தீர்மானிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாமிவேலுவுக்கு எதிராக முதற்கட்ட வழக்கு தாக்கல் செய்ததாக கடந்த திங்களன்று வேள்பாரி உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவரது குடும்பத்திற்கு “வேறு வழியில்லை” என்றும் “இது ஒரு கடினமான முடிவு” என்றும் அவர் கூறியிருந்தார்.