Home One Line P1 கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை!

686
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோத்தா கினபாலு: கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு கூடுதல் நாள் விடுமுறை அளித்த முதல் மாநிலமாக சபா திகழ்கிறது.

டிசம்பர் 24 முதல் 25 வரை இரண்டு நாள் பொது விடுமுறையை சபா முதல்வர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்துல் நேற்று புதன்கிழமை இரவு அறிவித்தார்.

இம்மாதிரியான ஒரு நாள் விடுமுறையை (டிசம்பர் 24) சேர்ப்பது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதோடு, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு இப்பெருநாளை சந்தோசமாகக் கொண்டாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த சபா மக்களிடையே ஒற்றுமையின் அடையாளமாகவும் காணப்படுகிறது.