Home One Line P2 இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது

இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது

685
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 11.25 நிலவரம்) – திங்கட்கிழமையன்று இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இன்று புதன்கிழமை நாள் முழுவதும் நடந்த விவாதங்களுக்குப் பின்னர் இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்ய சபா) பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகள் கிடைத்த வேளையில் 105 பேர் மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.

இந்திய நாடாளுமன்ற மேலவையில் இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தங்களை முன்மொழிந்து அதற்கான விளக்கங்களை வழங்கினார்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மை இனத்தினரை, மதத்தினரை இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக ஏற்றுக் கொள்ள இந்தப் புதிய மசோதா வகை செய்கிறது.

இந்த சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இன்றும் அசாம், திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.