Home One Line P2 அஸ்ட்ரோ வானவில் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

அஸ்ட்ரோ வானவில் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

915
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவின் வானவில் அலைவரிசையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன.

சனிக்கிழமை, 28 டிசம்பர்

அள்ளுங்கள் வெல்லுங்கள் – கிறிஸ்துமஸ் அத்தியாயம் வானவில் (அலைவரிசை 201), இரவு மணி 9

அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமான்ட் வயிலாக எங்கும் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் பேரங்காடியை மையமாக கொண்டு விளையாடக்கூடிய இவ்விளையாட்டு நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அத்தியாயத்துடன் மலர்கின்றது. மளிகை கருப்பொருளைக் கொண்ட வினாடி வினாக்கள், புதிர்கள் மற்றும் பல சவால் மிக்க பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் மூன்று ஜோடிகளும் நிறைவு செய்ய வேண்டும். தோல்வியுற்ற பங்கேற்பாளர்கள் குளீர் நீரை தெறித்தல், முட்டை எறிதல் மற்றும் பல நகைச்சுவை மிக்க அபராதங்களை மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் – மலேசிய திரைப்பட மராத்தான்

#TamilSchoolmychoice

வில்லவன் வானவில் (அலைவரிசை 201), மதியம் மணி 12

அஸ்ட்ரோ கோ வயிலாக எங்கும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யுங்கள்.

நடிகர்கள்: வினோத் மோகன், சங்கீதா கிருஷ்ணசாமி மற்றும் லோகன் நாதன் உள்ளூர் திரைப்படமான, வில்லவன், தனது தந்தையின் கொலைக்கு காரணமானவரை பழிவாங்கத் துடிக்கும் மகனின் பயணத்தை மிக அழகாக சித்தரிக்கின்றது. தனது இலட்சியத்தை அடையும் பயணத்தில் அவன் எதிர்பாராத ஆச்சரியங்களை சந்திக்கிறான். அவன் தனது நோக்கத்தில் வெற்றி பெறுவானா அல்லது ஆச்சரியங்களால் திசை திருப்பப்படுவானா? இதனைக் கண்டறிய இவ்விறுவிறுப்பான திரைப்படத்தைக் காணுங்கள்.

ஜாங்கிரி வானவில் (அலைவரிசை 201), மாலை மணி 3

அஸ்ட்ரோ கோ வயிலாக எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம்  (ஸ்ட்ரீம்) செய்யுங்கள்

நடிகர்கள்: விக்ரன் இளங்கோவன், அகல்யா மணியம், குபென் மகாதேவன் மற்றும் பலர். உள்ளூர் திரைப்படமான ஜாங்கிரி, காதல் சார்ந்த நகைச்சுவைகளை கொண்டிருப்பதோடு வரம்பற்ற திருப்பங்கள் மற்றும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியுள்ளது. தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் அதிருப்தி அடைந்த நாயகன் விக்ரன், தனது வருங்கால மனைவி ஜானுவை பிடிக்கவில்லை என்று அனைவரிடமும் தெரிவிப்பதன் மூலம் திருமண பந்தத்தை இரத்து செய்ய  முடிவு செய்கிறான். கதைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஜானுவும் விக்ரன் போலவே நடந்து கொள்கிறாள். எனவே, ஜானுவின் மீது காதல் வயப்படும் விக்ரன் அவள் மனதை கொள்ளைக் கொள்ள முற்படுகின்றான். இதுவே கதையோட்டத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்துகின்றது. இந்த விடுமுறை காலத்தில், அஸ்ட்ரோ வானவில்லில் ஜாங்கிரியை கண்டு களிக்க மறவாதீர்கள்.

சுகமாய் சுப்புலட்சுமி – வானவில் (அலைவரிசை 201), மாலை மணி 6

அஸ்ட்ரோ கோ வயிலாக எங்கும் பதிவிறக்கம் செய்யுங்கள் நடிகர்கள்: சரேஷ் டி 7, புனிதா சண்முகம், பாக்யா அரிவுகரசு, மற்றும் குபென் மகாதேவன். பல விருதுகளை வென்று குவித்த ‘சுகமாய் சுப்புலட்சுமி’, கார்த்திக் ஷமலன் இயக்கத்தில் மலர்ந்த உள்ளூர் திரைப்படமாகும். ஒருவர் வெற்றி அடைய மேற்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தேர்வுகளை கதையோட்டமாக கொண்ட இத்திரைப்படம் வாழ்க்கை இலக்குகளை அடைய உண்மையான அன்பு, நட்பு மற்றும் கனவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.

‘அச்சம் தவிர்’ வானவில் (அலைவரிசை 201), இரவு மணி 9

அஸ்ட்ரோ கோ வயிலாக எங்கும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யுங்கள்

நடிகர்கள்: கானா, உதயா, கீதா மற்றும் ஆனந்தா மலேசியா மற்றும் சிங்கப்பூர் திரைப்படமான அட்சம் தவீர், மனித ஆசைகளுக்கு எதிரான அச்சத்தின் பல்வேறு எல்லைகளை சித்தரிக்கிறது.