Home One Line P2 ‘மிஸ் வோர்ல்ட்’ உலக அழகிப் போட்டி – ஜமைக்கா அழகி முதலிடம்; இந்திய அழகிக்கு மூன்றாமிடம்!

‘மிஸ் வோர்ல்ட்’ உலக அழகிப் போட்டி – ஜமைக்கா அழகி முதலிடம்; இந்திய அழகிக்கு மூன்றாமிடம்!

870
0
SHARE
Ad

இலண்டன் – சனிக்கிழமை (டிசம்பர் 14) இங்கு நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் என்ற பட்டத்திற்கான 2019 உலக அழகிப் போட்டியில், ஜமைக்கா நாட்டு அழகி டோனி-ஆன் சிங் வெற்றியாளராக வாகை சூடினார்.

தனக்கு உலக அழகி பட்டம் சூட்டப்பட்டால் அதைக் கொண்டு மகளிருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் நிரந்தரமான, தொடர்ச்சியான மாற்றங்களைக் கொண்டு வர பாடுபடுவேன் என கேள்வி ஒன்றுக்கு அவர் வழங்கிய பதில் அவருக்கு அந்தப் பட்டத்தைத் தேடித் தந்துள்ளது.

23 வயதான அவர் புளோரிடா மாநில பல்கலைக் கழக பட்டதாரியாவார். தான் சாதிப்பதற்கு அழகு என்ற அம்சத்திற்கு குறைந்த பட்ச முக்கியத்துவமே தான் தருவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது இடத்தை ஒப்பெலி மெசினோ பிடிக்க, மூன்றாமிடத்தை இந்தியாவின் சுமன் ராவ் கைப்பற்றினார்.

வெற்றி பெற்ற டோனி-ஆன் சிங்குக்கு கடந்த ஆண்டின் உலக அழகி மெக்சிகோவின் வெனசா போன்ஸ் முடிசூட்டினார்.

உலக அழகிப் போட்டியில் கறுப்பினப் பெண் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.