Home One Line P1 மரணத் தண்டனைக்கு காத்திருக்கும் அசிலாவை சிறைக்கு வெளியே சந்தித்த அந்த முக்கியப் புள்ளி யார்?

மரணத் தண்டனைக்கு காத்திருக்கும் அசிலாவை சிறைக்கு வெளியே சந்தித்த அந்த முக்கியப் புள்ளி யார்?

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மரண தண்டனைக்காக காத்திருக்கும் காவல் துறையின் முன்னாள் சிறப்பு நடவடிக்கை பிரிவு குழு உறுப்பினர் அசிலா ஹாட்ரி, முக்கியப் புள்ளி ஒருவரை பிப்ரவரி மாதத்தில் காஜாங் சிறைக்கு வெளியே சந்தித்ததாக நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

நஜிப்பின் அரசியல் வாழ்க்கையை அடியோடு அழிக்க ஒரு சதி இருப்பதாக தாம் நம்புவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசிய அரசாங்க முகவர்கள் உட்பட பலர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று முன்னாள் சிறப்பு நடவடிக்கை பிரிவு உறுப்பினர் சிறுல் அசார் உமாரைச் சந்தித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். நஜிப்பிற்கு எதிராக ஓர் அறிக்கையை முன்வைக்க அவரை வற்புறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“பிப்ரவரி முதல், அசிலாவை சந்திக்க பல முக்கியப் புள்ளிகள் வருகை தந்துள்ளார்கள். பிப்ரவரி மாதம் சிறைக்கு வெளியே ஒரு முக்கியப் புள்ளியை அசிலா சந்தித்ததை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லைஎன்று இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் அவர் கூறினார்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மங்கோலிய மாடல் அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்ததற்காக அசிலாவின் தண்டனை மற்றும் மரணத் தண்டனையை மறுஆய்வு செய்ய, அவர் நேற்று திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். அது தொடர்பான விண்ணப்பத்தில் தலையிட நஜிப்பை பிரதிநிதித்துவப்படுத்த ஷாபி நீதிமன்றத்திற்கு வந்திருந்தபோது இவ்வாறு கூறினார்.

இருப்பினும், அந்த முக்கியப் புள்ளியின் அடையாளத்தை வெளிப்படுத்தவோ அல்லது தனிநபரா, எந்தவொரு கட்சியிலுள்ள ஓர் அரசியல்வாதியா என்பது குறித்த எந்த தகவலையும் வழங்குவதற்கு வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.

சிறைக்கு வெளியே, சிறையின் உள்ளே இல்லை. இது அவர் மரண தண்டனைக்கு காத்திருக்கும் போது நடந்துள்ளது. இது முற்றிலும் நெறிமுறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நான் சொன்னது போல், என்னால் அதனை உறுதிப்படுத்த முடியாது. அது குறித்து தகவல்கள் சேகரிக்க முயற்சிக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் மலேசிய முகவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் உட்பட பலர் சிறுலை சந்தித்ததாக  ஷாபி தெரிவித்துள்ளார்.