Home One Line P1 “ஹிஷாமுடின் விவகாரம் முடிந்து விட்டது!”- அனுவார் மூசா

“ஹிஷாமுடின் விவகாரம் முடிந்து விட்டது!”- அனுவார் மூசா

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஹிஷாமுடின் சம்பந்தமான விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு அனுப்பப்பட்ட காரணக் கடிதமானது தமது பார்வைக்கு வரவில்லை என்றும் அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். அம்னோ ஒழுக்காற்று வாரியம் ஹிஷாமுடினுக்கு இந்த கடிதத்தை வழங்கியிருந்தாலும், இது தீர்க்கப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார்.

இது குறித்து ஹிஷாமுடின் கட்சித் தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடிக்கு சமீபத்தில் விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த அம்னோ பொதுக் கூட்டத்தின் போது ஹிஷாமுடின் இந்த விவகாரம் குறித்து அகமட் சாஹிட்டிடம் தெளிவுப்படுத்தியதாக அனுவார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனக்குத் தெரிந்தவரை ஹிஷாமுடின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் சந்திப்பதற்காக, அம்னோ கட்சியின் முன்னாள் உதவித் தலைவருக்கு அம்னோ ஒழுக்காற்று வாரியம் எதிர்ப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டதாக நேற்று திங்கட்கிழமை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

அச்சந்திப்புக் கூட்டத்தில் 21 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.