அகமட் நைம் சாயிட், (34) மற்றும் முகமட் அஸ்மிர் ராம்லான், (40), இருவரும் இரண்டு வெவ்வேறு அமர்வு நீதிமன்றங்களில் 15 நிமிட இடைவெளியில் இரண்டு வெவ்வேறு நீதிபதிகள் முன் குற்றம் சாட்டப்பட்டனர்.
அகமட் நைம், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதியன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஒரு பயங்கரவாதச் செயலுக்காக மலேசியாவை விட்டுச் சென்றதாக நீதிபதி தெங்கு ஷாரிஸாம் துவான் லா முன் குற்றம் சாட்டப்பட்டார்.
மலேசிய குடிநுழைவுத் துறை, விமான நிறுவனம் மற்றும் வங்கி அறிக்கை ஆகியவற்றின் அறிக்கைகளுக்குக் காத்திருப்பதால், தெங்கு ஷாரிஸாம் ஜனவரி 20-ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
இங்குள்ள மற்றொரு அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதியன்று, முகமட் அஸ்மிர் மீது அதே வழக்கு சம்பந்தமாக நீதிபதி சைபுலாக்மால் முகமட் சைட் முன் குற்றம் சாட்டப்பட்டார்.