Home One Line P1 ரஷ்ய அதிபராக புதின் நீடித்திருக்க, முழு அமைச்சரவையும் பதவி விலகியதா?

ரஷ்ய அதிபராக புதின் நீடித்திருக்க, முழு அமைச்சரவையும் பதவி விலகியதா?

731
0
SHARE
Ad

மாஸ்காவ்: ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் உட்பட முழு ரஷ்ய அமைச்சரவையும், நாட்டின் நிர்வாகத்திலிருந்து பதவி விலகுவதாக அறிவித்ததற்கு, ரஷ்ய அதிபர் விளாமிடிர் பதின் தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகினர். அரசமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும் சூழல் இருந்தது.

வருகிற 2024-ஆம் ஆண்டுடன் புதினின் நான்காவது பதவிக் காலம் முடிவடையும் நிலையில், இந்த அரசியலமைப்பு மாற்றத்தால் புதின் வேறொரு புதிய பொறுப்பு ஏற்கலாம் என்றும், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆண்டின் தொடக்க உரையில் பேசிய புதின், தனது திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்தினார். அதற்கு பிறகு, எதிர்பாராதவிதமாக, தாம் குறிப்பிட்ட மாற்றங்களை முன்னெடுக்க பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் தனது முழு அமைச்சரவையுடன் பதவி விலகுவார் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, மிகைல் மிஷுடினை ரஷ்யாவின் புதிய பிரதமராக நியமிக்கும் கடிதத்தில் புதின் நேற்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.

முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் உட்பட முழு ரஷ்ய அமைச்சரவையும், நாட்டின் நிர்வாகத்திலிருந்து பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மிஷுடின் வரி சேவைகளின் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அமைச்சரவையின் பாரிய மறுசீரமைப்பின் முடிவு நாட்டின் மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் ஊக்குவிக்கும் என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் செயல்படுத்த விரும்பும் மாற்றத்திற்கான சில இலக்குகளை புதின் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மிஷுடின் சேவையின் போது, வலுவான ரஷ்ய வரி நிர்வாக முறையை நவீனமயமாக்குவதிலும் வரி விகிதங்களை அதிகரிப்பதிலும், பெரும்பாலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.