Home One Line P1 45 பட்டாசுகள் மட்டுமே பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படும்!- காவல் துறை

45 பட்டாசுகள் மட்டுமே பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படும்!- காவல் துறை

633
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாப்பாப்மற்றும்ஹேப்பி பூம்எனப்படும் மொத்தம் 45 பட்டாசுகள் பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்று துணை காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

நாட்டில் பண்டிகை காலங்களில் பட்டாசுகளை இறக்குமதி செய்ய, சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இவற்றில், 36 வகையான பட்டாசுகளை பொதுவாக விற்க அனுமதிக்கப்படுகிறது, மேலும் ஒன்பது பட்டசுகளின் விற்பனைக்கு நிபந்தனைகள் உள்ளன.”

#TamilSchoolmychoice

சிறு வணிகர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கடைகளில் 36 வகையான பட்டாசுகளை விற்க அனுமதிக்கப்படுகின்றன. அவை பாதுகாப்பான புகலிடமாகவும், உராட்சி மன்றத்தின் அதிகார உரிமம் பெற்றதாகவும் இருக்க வேண்டும்என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஒன்பது வகையான பட்டாசுகளில், ஹேப்பி பூம் ரெட் கிராக்கர், ஹேப்பி பூம் செலெப்ரேஷன் மற்றும் ஹேப்பி பூம் ஷூட் கேக் ஆகியவை தேவைகளுக்கு ஏற்ப இறக்குமதி செய்யும் நிறுவனம் மூலம் வாங்க முடியும் என்று மஸ்லான் கூறினார்.

சிறு வணிகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள், முகவர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பது, இணையத்தில் அல்லது எந்த சமூக ஊடக பயன்பாட்டிலும் பட்டாசு வகைகளை விற்பது போன்றவைகள் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

சில்லறை விற்பனையாளர்கள் பாப்பாப் பட்டாசுகளை விற்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். உணவு வளாகங்களில் எந்த வகை பட்டாசுகளையும் விற்க அனுமதிக்கப்படுவதில்லை.”

மற்றவர்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, பட்டாசுகளை விளையாடுவதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறந்த மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே விளையாட முடியும்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பட்டாசு விளையாடுவதற்கான தடை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் அது வெடிபொருள் சட்டம் 1957-க்கு உட்பட்டது என்றும் மஸ்லான் வலியுறுத்தினார்.