Home நாடு பிகேஆர் இளைஞர்-மகளிர் பிரிவுகளின் கூட்டத்தைத் திறந்து வைக்க விருப்பமில்லை! ரபிசி கடிதம்!

பிகேஆர் இளைஞர்-மகளிர் பிரிவுகளின் கூட்டத்தைத் திறந்து வைக்க விருப்பமில்லை! ரபிசி கடிதம்!

57
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறவிருக்கும் இளைஞர்-மகளிர் மாநாடுகள் வழக்கமாக கட்சியின் துணைத் தலைவர் திறந்து வைத்து உரையாற்றுவது வழக்கம்.

ஆனால், துணைத் தலைவருக்கான போட்டியில் நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரத்தில் சுற்றிச் சுழன்று வரும் நடப்பு துணைத் தலைவர் ரபிசி ரம்லி அந்த மாநாடுகளைத் திறந்து வைக்க தனக்கு விருப்பமில்லை என பிகேஆர் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அறிவித்தார்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை (மே 18) பேராக் தலைநகர் ஈப்போவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தத் தகவலை ரபிசி வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இளைஞர் – மகளிர் மாநாடுகளைத் தான் திறந்து வைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கும் தனது கடிதத்தை கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் புசியா சாலேக்கு மட்டும் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அந்தக் கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதற்கு யார் காரணம்? யார் அதை வெளியிட்டது? என்றும் ரபிசி கேள்வி எழுப்பினார்.