மாஸ்காவ்: மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“நாம் விண்வெளி மற்றும் பொறியியலில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஒரு விண்வெளி பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் முன்மொழிவு முதலீட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், இந்தத் துறையில் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன் “என்று விளாடிவோஸ்டோக்கில் பிரதமர் கூறினார்.
கிழக்கு பொருளாதார அமைப்பு (இஇஎப்) ரஷ்யா 2019-இல் பேசிய பிரதமர், மலேசியா இந்த துறையில் ரஷ்யாவிடமிருந்து அறிவையும் அனுபவத்தையும் பெற ஆர்வமாக இருக்கிறது என்றார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மங்கோலிய ஜனாதிபதி கல்ட்மாஜின் பட்டுல்கா ஆகியோருடன் பிரதமர் சந்திப்பை மேற்கொண்டார்.
ரஷ்யாவின் தூர கிழக்கை வளர்ப்பதற்கான வழிமுறையாக புதினால் 2015-இல் இஇஎப் தொடங்கப்பட்டது.