Home One Line P1 உலகக் கோப்பை தகுதித் சுற்றில் மலேசியா, இந்தோனிசிய அணியை வீழ்த்தியதை அடுத்து அரங்கில் கலவரம்!

உலகக் கோப்பை தகுதித் சுற்றில் மலேசியா, இந்தோனிசிய அணியை வீழ்த்தியதை அடுத்து அரங்கில் கலவரம்!

921
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு வியாழக்கிழமை ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ அரங்கில் மலேசியாவிற்கும், கருடா அணிக்கும் இடையிலான 2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை, 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தகுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட பலவரத்தைத் தொடந்து இந்தோனிசிய காவல் துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

விவிஐபி நுழைவாயில்களில் இருந்து ஆதரவாளர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகையை மைதானத்தின் முக்கிய நுழைவாசலில் எரிந்ததாகவும், அப்பகுதியிலுள்ள மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இந்தோனிசிய சிஎன்என் குறிப்பிட்டிருந்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று மலேசியர்கள் காயமடைந்தனர்.

இதற்கிடையில், நேற்றிரவு போட்டியை நேரடியாக பார்வையிட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கெலோரா பங் கர்னோ அரங்கின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இரும்பு பொருள்கள், புட்டிகள் மற்றும் எரிப்புகள் பல முறை எங்கள் மீது வீசப்பட்டன. சில இந்தோனிசிய ஆதரவாளர்களும் மலேசியா ஆதரவாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு நுழைய முயன்றனர். அதன்படி, உடனடியாக விளையாட்டு ஒரு சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

பிபாவுக்கு அதிகாரப்பூர்வ புகார் அளிக்க உள்ளதாக எப்ஏஎம் என்னிடம் தெரிவித்துள்ளது. இந்தோனிசிய அரசாங்கத்துக்கும், அங்குள்ள விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அளிப்பேன்என்று அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடந்த போட்டியில், மலேசியா அணி இந்தோனிசிய அணியை 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இரு முறை இந்தோனிசிய அணியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மலேசிய அணி, மீண்டும் எழுந்து இந்தோனிசிய அணியை வெற்றிக் கொண்டது.