சென்னை: பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கியது.
கடந்த 2017-இல் இப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர், இதற்கான போராட்டம் தமிழ் நாடெங்கிலும் வெடித்து மீண்டும் இப்போட்டியை நடத்தும் அனுமதியை தமிழகம் பெற்றது.
அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்று வட்டாரத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
மொத்தமாக 700 காளைகள் இப்போட்டியில் பங்கெடுத்த நிலையில், அவற்றை அடக்க 900 வீரர்கள் களத்தில் இறங்கினர்.
இதனிடையே, மாலை 5 மணிக்கு இந்த போட்டி நிறைவடைந்தது. ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி இரஞ்சித் எனும் இளைஞர் காரைப் பரிசாக வென்றார்.
மேலும், இந்த போட்டியின் போது 15 பேர் காயமடைந்ததாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்த வீரர் இரஞ்சித் குமாருக்கு ஹூண்டாய் சான்ட்ரோ கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.