Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டுமே ஆட்சியில் நிலைக்கலாம், பிரதமர் எச்சரிக்கை!

நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டுமே ஆட்சியில் நிலைக்கலாம், பிரதமர் எச்சரிக்கை!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆளும் கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணி தமது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், ஒரு தவணை மட்டுமே ஆட்சி செய்த கூட்டணியாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.

நாங்கள் ஐந்து இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தோம். அவர்களுக்கு இன்னும் புரியவில்லைஎன்று அவர் லங்காவியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் ராய்ட்டர்ஸ்ஸிடம் கூறியதாக மலேசியாகினி மேற்கோள் காட்டி உள்ளது.

#TamilSchoolmychoice

நான் அவர்களுக்கு சொல்வது ஒன்றுதான், ஒரு ஜனநாயக ஆட்சியில் உங்களுக்கு மக்களின் ஆதரவு தேவை.”

ஆனால், அதற்கு பதிலாக, அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மக்களை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் வழிகளை மாற்றாவிட்டால் அவர்கள் வெல்ல மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான வாரிசான் கடந்த சனிக்கிழமை கிமானிஸ் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டணியின் புகழ் பொதுமக்கள் மத்தியில் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.