Home One Line P1 சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்

799
0
SHARE
Ad

கோலசிலாங்கூர் – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளரும், ஜெராம் புக்கிட் செராக்கா தமிழ்ப் பள்ளியின் நடப்பு தலைமையாசிரியருமான டேனியல் அமல்தாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலமானார். அவருக்கு வயது 56.

கோலசிலாங்கூரில் பிறந்து வளர்ந்தவரான சிலாங்கூரில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றி சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.

அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றலாகி, அண்மையில் அவர் ஜெராம் புக்கிட் செராகா தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

டேனியல் அமல்தாசின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்:

No: 11, Lorong Teratai 2/16,

Bandar Baru, Kuala Selangor,

Selangor

அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் காலை 11.00 மணிக்கு புக்கிட் ரோத்தான் அசாம் ஜாவா அர்ச் ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகளுக்குப் பின்னர் அசாம் ஜாவா இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புக்கு : ஜோசப் 010-8070691; சின்னப்பன் 012-3880289