இதற்கிடையில் மலிண்டோ ஏர் விமானப் பணியாளர் 7 பேர்கள் சீனாவின் செங்சாவ் (Zhengzhou) நகரில் கொரனாவைரஸ் பீடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) கோலாலம்பூரிலிருந்து செங்சாவ் நகருக்குச் சென்ற விமானத்தில் அந்தப் பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டிருந்தனர். வுஹான் மாநிலத்தைத் தாக்கிய கொரொனாவைரஸ் பீடித்திருந்த பயணி ஒருவரும் அதே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் இதுவரை நான்கு பேர்களுக்கு கொரனாவைரஸ் பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனாவின் குடிமக்களாவர்.
இதற்கிடையில் மலேசியாவில் கொரொனாவைரஸ் பரவுதலைத் தடுக்க அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்கான அனுபவமும் ஆற்றலும் மலேசியாவுக்கு இருப்பதாகும் துணைப் பிரதமர் வான் அசிசா கூறியுள்ளார்.