Home One Line P2 விஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்

விஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்

1153
0
SHARE
Ad

சென்னை – நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் “மாஸ்டர்” படம் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக அண்மையில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் காரணங்களுள் ஒன்று.

அடுத்ததாக மற்றொரு பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்பது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கான மற்றொரு காரணமாகும். அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக விஜய்யுடன் மோதுகிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

படத்திற்கான முதல் இரண்டு தோற்றங்களும் (போஸ்டர்) நடிகர் விஜய்யை மையமாக வைத்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருகும் புதிய மூன்றாவது தோற்றம் விஜய் – விஜய் சேதுபதி இருவரும் முகத்தில் இரத்தக் காயங்களுடன் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வது போல் வெளியிடப்பட்டிருப்பது படம் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.