ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை இந்திய அதிபர் வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில் அமரர்களாகிவிட்ட மூவருக்கு இந்திய அரசாங்கத்தின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோரே அந்த மூவராவர்.
மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் பெறுபவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமரர் மனோகர் பாரிக்கர், தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன், மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா, பூப்பந்து விளையாட்டு வீராங்களை பி.வி.சிந்து ஆகியோரும் அடங்குவர்.


மேலும் 118 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்திப் பட நட்சத்திரங்கள் கங்கனா ரனாவத், ஏக்தா கபூர், இயக்குநர் கரண் ஜோஹார் ஆகியோரும் அடங்குவர்.