Home One Line P2 அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா

அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா

1037
0
SHARE
Ad

புதுடில்லி – கைத்தொலைபேசிகளாக அறிமுகமாகி, கால ஓட்டத்தில் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகளாக உலகம் எங்கும் தொலைத் தொடர்பு நடைமுறைகளை மாற்றியிருக்கின்றன அந்தக் கருவிகள்.

திறன்பேசிகளுக்கான உலகின் மிகப் பெரிய சந்தையாக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவை பல ஆண்டுகளுக்கு முன்னரே பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய திறன்பேசி சந்தையாக வளர்ந்தது சீனா.

அதன்பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசி சந்தையாக தனது நிலையை அமெரிக்கா தக்க வைத்துக் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

இப்போது அமெரிக்கா தனது இரண்டாவது நிலையையும் இன்னொரு நாட்டிடம் இழந்திருக்கிறது. இந்தியாதான் அந்த நாடு!

2019-ஆம் ஆண்டில் மட்டும் 158 மில்லியன் திறன்பேசிகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த திறன்பேசிகளில் பெரும்பான்மையானவை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும். மிகவும் குறைந்த விலையில் போட்டித் தன்மையோடு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதால் சியாவுமி, விவோ, ரியல்மி, ஒப்போ போன்ற சீன வணிகமுத்திரை கொண்ட திறன்பேசிகளை வாங்குவதற்கு இந்தியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட திறன்பேசிகளில் 72 விழுக்காடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் மலிவு விலை ஆப்பிள் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தின. அவற்றையும் வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டினர்.

இந்த மாற்றங்களால் தற்போது இந்தியா சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய திறன்பேசிகளுக்கான சந்தையாக உருவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது நிலையை அடைந்திருக்கிறது.