Home One Line P2 பழம் பெரும் நடிகரும், பாடகருமான டி.எஸ். இராகவேந்திரா காலமானார்!

பழம் பெரும் நடிகரும், பாடகருமான டி.எஸ். இராகவேந்திரா காலமானார்!

862
0
SHARE
Ad

சென்னை: பழம் பெரும் நடிகரும் பாடகருமான டி.எஸ்.இராகவேந்திரா தமது 75-வது வயதில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு கே.கே.நகரில் பிற்பகல் 2 மணியளவில் நடத்தப்பட்டது.

இராகவேந்திரர் என்று அழைக்கப்படும் இராகவேந்திரா, இறப்புச் செய்தியைக் கேட்டதும் பல திரைப்பட ஆர்வலர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

விருது பெற்ற சிந்து பைரவி திரைப்படத்தில் மூத்த இயக்குனர் கே.பாலசந்தர் அவரை நீதிபதியாகவும், சுஹாசினியின் மாற்றாந்தாராகவும் தேர்வு செய்தபோது இராகவேந்திரா தமிழ் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.

#TamilSchoolmychoice

நடிகை ரேவதியின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்ததற்காக இராகவேந்திரா விருதினைப் பெற்றார்.

விக்ரம், வாழ்க  ஜனநாயகம், ஹரிச்சந்திரா, நீ வருவாய் என மற்றும் பல குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக 2005-ஆம் ஆண்டில் வெளியான பொன் மேகலை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.