Home One Line P1 “பெர்னாமா அகப்பக்கத்தில் தமிழ் மொழிக்கும் இடம்” – வேதமூர்த்தி பாராட்டு

“பெர்னாமா அகப்பக்கத்தில் தமிழ் மொழிக்கும் இடம்” – வேதமூர்த்தி பாராட்டு

911
0
SHARE
Ad

புத்ராஜெயா : தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் அகப்பக்கத்தில் தமிழ் மொழியும் தற்போது இடம் பெற்றிருப்பது மிகந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்களுக்கு செய்தியை விரைவாகவும் துல்லியமாகவும் அளித்து வரும் ஊடக நிறுவனமான பெர்னாமாவிற்கு சமூகத்தில் எப்பொழுது ஈர்ப்புத் தனம் இருக்கும். அதேவேளை, இந்தச் செய்தி நிறுவனத்தின் அகப்பக்கத்தில் மலாய், ஆங்கிலம், சீனம், அரபு உள்ளிட்ட பல மொழிகளும் இடம்பெற்றிருந்த நிலையில் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெறாமல் இருந்தது தமிழ் வாசகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. சுடச்சுட செய்தியை வாசிக்கும் தமிழ் வாசகர்கள் பெர்னாமா அகப்பக்கத்தில் தற்பொழுது தமிழ் மொழியிலும் செய்தியை வாசிக்கும் ஏற்பாடு இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இடம்பெற்று வருகிறது” என்றும் வேதமூர்த்தி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மொழிக்காக செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டிற்கு மலேசிய இந்திய சமூகத்தின் சார்பில் குறிப்பாக மலேசியத் தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இதன் தொடர்பில் நான் அனுப்பிய கடிதத்திற்கு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான ஏற்பாட்டை செய்த தகவல் – பல்லூடக அமைச்சர் கோபிந் சிங் டியோவிற்கும் பெர்னாமா நிருவாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் தனது அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்னாமா தமிழ்ச் செய்தியைப் படிக்க விரும்பும் வாசகர்கள்
https://www.bernama.com/tam/index.php – என்னும் அகப்பக்கத்தை நாடலாம்.