
சென்னை – ஓவியங்கள் என்றால் ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் எனப் புகழாரங்கள் சூட்டப்படுவதுண்டு. அந்த அளவுக்கு உலக அளவில் அழகும் பிரபலமும் வாய்ந்தவை ராஜா ரவிவர்மா என்ற இந்திய ஓவியரின் ஓவியங்கள். அந்தக் காலகட்ட பெண்களின் அழகும், கவர்ச்சியும், பாரம்பரியமும் மின்னும், மிளிரும் வண்ணம் அமைந்தவை ரவிவர்மாவின் பழங்கால ஓவியங்கள்.
1848 முதல் 1906-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அந்த மாபெரும் ஓவியனின் படைப்புகள் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன.

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான வெங்கட்ராம் அந்தக் கால ரவிவர்மாவின் ஓவியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இன்றைய கோலிவுட் நட்சத்திரங்களைக் கொண்டு அழகான புகைப்படங்களாக எடுத்திருக்கிறார்.
நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சுருதிஹாசன், சமந்தா பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைக் கொண்டு வெங்கட்ராம் எடுத்திருக்கும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.
அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:


