Home One Line P1 மாற்றாந்தாயின் கொடுமை: கண்கள், முகத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி!

மாற்றாந்தாயின் கொடுமை: கண்கள், முகத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி!

860
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி தனது மாற்றாந்தாயின் கொடுமையால் கண்களிலும் முகத்திலும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைவர் , டேவிட் மார்ஷலின் கூற்றுப்படி, ஒரு வாரத்திற்கு முன்பு அச்சிறுமி அழுதது குறித்து சந்தேகம் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரர்களிடமிருந்து அறிக்கை கிடைத்ததை அடுத்து அச்சிறுமி மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிறுமியை தனது மாற்றாந்தாய் தொடர்ந்து திட்டுவது பலமுறை கேட்டதை அடுத்து, அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

டேவிட் காவல்துறையினருடன் அவ்வீட்டிற்கு ஆய்வுக்குச் சென்றதாகக் கூறினார்.

அச்சிறுமி கதவின் பின்னால் மறைந்திருந்ததும், பயந்து அதிர்ச்சியடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இரு கண்களையும் திறக்க முடியாதபடி அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

பூச்சி கடித்ததால்தான் தம் முகம் வீக்கமாக இருப்பதாக அச்சிறுமியை சொல்லச் சொல்லியதாகவும் அவர் கூறினார். பின்னர், அச்சிறுமியே தமது மாற்றாந்தாய் தன்னை அடித்ததாக ஒப்புக்கொண்டார்.

செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுவதற்கு முன்னர், புகார் அறிக்கை அளிக்க செபெராங் ஜெயா காவல் நிலையத்திற்கு அச்சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், செபெராங் பெராய் மத்திய காவல்துறை தலைமை உதவி ஆணையர் நிக் ரோஸ் அஜான் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மேலதிக விசாரணைக்காக அச்சிறுமியின் பெற்றொர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.