இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் இத்திரைப்படத்தினை இயக்கியிருப்பார்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த டைனோசர் இனத்தை மீண்டும் உருவாக்கி காட்டி அனைவரையும் அசத்தினார்.
இந்த ஜுராசிக் பார்க் திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்து குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை பிரபலமானது.
இந்நிலையில் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படங்களின் கடைசி பாகமாக ஜுராசிக் வேல்டு மூன்றாவது பாகம் வருகிற 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதைக்கள விவரங்கள் இன்னும் தெளிவற்ற நிலையில்தான் உள்ளது.