சிரம்பான்: போர்ட் டிக்சன் காவல் நிலையத்தில் கலவரம் செய்து சண்டையிட்டுக் கொண்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
போர்ட் டிக்சன் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முகமட் கூறுகையில், காவல்துறையினரை அச்சுறுத்தியது மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்தது போன்ற குற்றங்களுக்கு உதவுவதற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முன்னதாக, 1 நிமிட 53 நிமிட காணொளியில், அக்கும்பல் காவல் நிலையத்தின் உள்ளே இருந்துக்கொண்டே ஆக்ரோஷமாக செயல்படுவதைக் காணமுடிந்தது. இந்த காணொளி பரவலாக அனைத்து சமூக பக்கங்களிலும் பரப்பப்பட்டது.
கார் கண்ணாடியை குடிபோதையில் ஒரு கும்பல் உடைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டை காவல் நிலையத்தின் முற்றத்தில் தொடர்ந்தது. இதில் 24 முதல் 33 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து சந்தேக நபர்களுக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் இருப்பதாகவும், நான்கு பேருக்கு எந்தவொரு குற்றப்பதிவுகளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.