Home One Line P2 கொவிட்-19: அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாக உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்சமாநாட்டை பேஸ்புக் இரத்து செய்தது!

கொவிட்-19: அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாக உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்சமாநாட்டை பேஸ்புக் இரத்து செய்தது!

671
0
SHARE
Ad

கலிபோர்னியா: கொரொனாவைரஸ் (கொவிட்-19) பரவுவதால் அடுத்த மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடக்கவிருந்த உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்ச மாநாட்டை பேஸ்புக் நிறுவனம் இரத்து செய்துள்ளது.

“ஏராளமான எச்சரிக்கையுடன், கொரொனாவைரஸ் தொடர்பான பொது சுகாதார அபாயங்கள் உருவாகி வருவதால் எங்கள் உலகளாவிய சந்தைப்படுத்தல் உச்சமாநாட்டை இரத்து செய்துள்ளோம்” என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சான் பிரான்சிஸ்கோவில் கொவிட் -19-இன் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று நகர சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான 15-வது வழக்கை கடந்த வியாழக்கிழமை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியது. பெரும்பாலான வழக்குகள் கலிபோர்னியாவில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவுவதால் நிகழ்ச்சிகளை கைவிட்டு அல்லது ஒத்திவைக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்பாளர்களின் நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனமும் ஆதரித்து கையில் எடுத்துள்ளது.